'துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் வாகனங்கள்.. : இலங்கையர்களுக்கு சுமையாக மாறும்.." என எச்சரிக்கை



அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
 
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  இதனைத் தெரிவித்த அவர்

 
ஆகஸ்ட் 15க்கு முன்னரான 45 நாட்களுக்குள் 8,726 வாகனங்கள் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 வாகனங்கள் இன்னும் கணக்கில் வராமல் இருக்கின்றன.
 
அதிகரித்து வரும் தாமதச் செலவுகள் இறுதியில் பொதுமக்களுக்குச் சுமையாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.